நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது..!
Retired Assistant Police Inspector Murder Case in Nellai Main Accused Arrested
நெல்லையில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக, கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகீர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

பரபரப்பான இவ்வழக்கில், கார்த்திக் (32), அக்பர் ஷா(32), ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 05 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், நூருனிஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகிறது.
English Summary
Retired Assistant Police Inspector Murder Case in Nellai Main Accused Arrested