காஷ்மீரில் ஆன்லைனில் எறிகுண்டு தாக்குதலுக்கு பயிற்சி அளித்த ராணுவ வீரர் கைது..!
An army soldier trained in bomb attacks online has been arrested in Kashmir
பஞ்சாப்பின் முக்த்சார் சாகிப் பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சுக்சரண் சிங். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இவர், 10 ஆண்டு கால பணி அனுபவம் உள்ளவர். இந்நிலையில், ஜலந்தர் நகரில் உள்ள யூ-டியூபர் ரோஜர் சந்து என்பவர் மீது எறிகுண்டு வீசப்பட்டுள்ள சம்பவத்திற்கும், சிங்குக்கு தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, பஞ்சாப் போலீசார் ரஜோரியில் வைத்து சுக்சரண் சிங்கை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பில், போலீசார் கூறும்போது, ஹர்திக் கம்போஜ் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் சிங் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதில், எறிகுண்டுகளை எப்படி வீசுவது என்பது பற்றி கம்போஜுக்கு ஆன்லைன் வழியே சிங் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இதற்காக, அவர் தொடக்கத்தில் போலியான எறிகுண்டு ஒன்றை பயன்படுத்தி உள்ளதாகவும், பின்னர் உண்மையான எறிகுண்டை வைத்து அவர் பயிற்சி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கான சான்றுகளை ராணுவ அதிகாரிகளிடம் போலீசார் அளித்துள்ளதாகவும், அவர்களிடம் சிங்கை கடந்த 14-ந்தேதி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இதன்பின்னர் சிங்கை போலீசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 05 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். அத்துடன், சந்தேகத்திற்குரிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மொத்தம் 18 பேர் இந்த பெயர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யூ-டியூபர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷெஷாத் பாட்டி என்பவர் பொறுப்பேற்று கொண்டுள்ள நிலையில், பஞ்சாபில் 06 மாதங்களாக தொடர்ச்சியாக எறிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
An army soldier trained in bomb attacks online has been arrested in Kashmir