டொவினோதாமஸ் நடித்த 'நரி வேட்டை' படத்தின் முதல் பாடல் வெளியானது...! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான 'டொவினோ தாமஸ்' அடுத்ததாக 'நரி வேட்டை' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் 'ஷேன் நிகாம்' நடிப்பில் 'இஷ்க்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இயக்குனர் 'சேரன்' நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகமுடிவு செய்துள்ளது.இது உண்மைச் சம்பவத்தின் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் இசையை 'ஜேக்ஸ் பிஜாய்' மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'மின்னல்வாலா' பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

first song film Nari Vettai starring Dovino Thomas released


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->