அதிமுகவின் நூதன ஆள் சேர்க்கை...! குலுக்கல் முறையில் தங்க நாணயம்....
AIADMKs innovative recruitment Gold coin by lottery
ஊத்துக்குளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இது தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ் பங்கேற்றார். தொடர்ந்து வரும் மார்ச் 5-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுனில் மாலை 5:30 மணிக்குப் பொதுக்கூட்டத்தை நடத்தஅதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில் எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தாமோதரன் பங்கேற்க உள்ளனர்.

அதிமுக உள்ளூர் கட்சி நிர்வாகிகள்:
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குச் சிறப்பு பரிசாக நாணயம் வழங்கப்படும் என அதிமுக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். குழுக்கள் முறையில் மூன்று நபர்களுக்குத் தங்க நாணயமும், 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் கிரைண்டர்,பீரோ, மிக்சி, குக்கர் போன்ற பாத்திரங்கள் வழங்கப்படும் என்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சேர் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
AIADMKs innovative recruitment Gold coin by lottery