நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு ஜப்தியா!!! - நீதிமன்றம் உத்தரவு.... - Seithipunal
Seithipunal


ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி இருவரும் இணைந்து 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தைத் தயாரித்தனர். இதில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதற்காகத் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3,74,75,000 பணம் கடனாக வாங்கி இருந்தனர்.


சிவாஜி கணேசன் வீடு ஜப்தி:

கடன் தொகையைத் திருப்பி தராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் 9,02,40,000 சேர்த்து, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த ஆண்டு மே 4 -ம் தேதி உத்தரவிட்டார். படம் நிறைவு பெறாததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதற்குத் தனபாக்கியம் என்டர்பிரைசஸ், நிறுவனம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

பதில் மனு தாக்கல்:

இதில் ஈசன் புரோட்டாக்ஷன்ஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு மார்ச் 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Sivaji Ganesans house seized Court orders


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->