90'ஸ் ஃபேவரைட் 'பெப்ஸி உமா'.? தொலைகாட்சி தொகுப்பளர்களின் ரீஸன்ட் ரீயூனியன்! - Seithipunal
Seithipunal


90 களின் காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்  பெப்சி உமா. சன் டிவியின் தொகுப்பாளரான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சன் டிவியில் தொகுப்பாளர்களாக பணியாற்றிய பெப்சி உமா விஜயசாரதி மற்றும் ரத்னா ஆகிய மூன்று பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக இருக்கிறது. பெப்சி உமாவிற்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டமிருப்பது போல் விஜய் சாரதிக்கும்  ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி மெகா சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் அவரது மருமகனாக நடித்திருப்பார் விஜய் சாரதி. மற்றும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரான ரத்னா சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். மேலும் இவர் திரைவிமர்சனமும் செய்து இருக்கிறார்.  இவரது திரைவிமர்சனம் நிகழ்ச்சியை பார்த்தாலே ரசிகர்களுக்கு  படம் பார்த்த நிறைவு கிடைக்கும் அந்த அளவுக்கு அழகிய உச்சரிப்புடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இவர்.

இந்த மூன்று பேரும் ஒரு விருது வழங்கும் விழாவின் போது சந்தித்திருக்கிறார்கள். அந்த நிகழ்வை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர். மேலும் பெப்ஸி உமா உடன் திரைப்பட நடிகையான ரேகா நாயரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனது புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90s kids favourite tv stars reunion pictures goes viral on internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->