வசூலில் வாரி குவித்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம்......ஓ.டி.டி-ல் வெளியீடு - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய விஜய் ஆண்டனி, தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என தனது திறமைகளை பன்மடங்கு அளித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி  ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.  

இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் டெண்ட்கொட்டா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man who did not like the rain in the collection released on OTT


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->