கர்நாடகாவில் இன்று பொது விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இந்தியாவில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி கர்நாடகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:- "அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் 7 நாட்கள் கர்நாடகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today public holiday in karnataga for manmohan singh death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->