இயக்குனர் அமீரின் 'மாயவலை' - டீசரை வெளியிடும் இயக்குநர்கள்!
Aamir Mayavalai movie Teaser Release
இயக்குனர் அமீர் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்னும் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.
தற்போது இவர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சமீப காலமாக ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமீருக்கு பல இயக்குனர்கள் ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அவர்கள் அனைவரும் இணைந்து தற்போது படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மாயவலை' என்னும் திரைப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர்கள் வெற்றிமாறன், சேரன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு. பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட உள்ளனர்.
English Summary
Aamir Mayavalai movie Teaser Release