இரண்டு ஆண்கள் திருமணம் செய்துகொள்வதை படமாக்கிய கிருத்திகா உதயநிதிக்கு ரெயின்போ அம்பாசிட்டர் விருது; LGPT அமைப்பினர்..! - Seithipunal
Seithipunal


LGPT அமைப்பினர் வருடாந்தம் நடத்தும் சென்னை ரெயின்போ திரைப்பட விழா 2025 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 07 வருடங்களாக நடைபெறும் இந்த நிகழ்வில் 04th எடிசன், நடிகை ஷகீலாவின் மகள் திருநங்கை சாஷா தலைமையில் நடைபெறவுள்ளற்றது.

உலக நாடுகளில் இருந்து இந்த வருடம் இந்த அமைப்புக்கு, LGPT சார்ந்த நபர்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கிய 2000 க்கும் மேற்பட்ட படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவண படங்கள் வந்துள்ளதாக நடிகை ஷகீலா கூறியுள்ளார். 

இதில் 55 படங்கள் தேர்வு  செய்யப்பட்டு, இன்று 07, 08, 09 ஆகிய தேதிகளில் சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவெல் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளளார். அத்துடன், இந்த படங்களை 04 வகையாக பிரித்து சிறந்த 03 படங்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக திருநங்கை ஷாஷா கூறியுள்ளார். 

அத்துடன் அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பினர் மீது சமூகத்தின் பார்வை, வலிகள், அவர்கள் பட்ட துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள் அடங்கிய திரைப்படங்கள் மற்றும் அல்லாது, மூன்றாம் பாலினத்தினர் மற்றும் LGPT-யை சேர்ந்தவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்ற 'செக்சன் 377' சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கி இருந்தது. 

அதற்காக இவர்கள் எடுத்த நடவடிக்கை, அதற்கான உழைப்பு போன்ற விடயங்கள், இந்த சட்டம் நீக்கப்பட்டதற்கு முன்பு மற்றும் பின்பு இந்த LGPT சமூகத்தில் மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக, நடிகை வனிதா விஜயகுமார். எழுத்தாளர் மனுஷ புத்திரன், நடிகை மற்றும் சமூக ஆர்வலர் ரேக்கா நாயர், மாடல் மற்றும் சமூக ஆர்வலர் திருநம்பி கரண் ராமன், மற்றும் திருநங்கை ஷாஷா ஆகியோர்கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வை திரங்கையான நடிகை நேஹா என்பவர் Moderate செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் இன்னொரு குழுவில், ஜெயா, ஸ்ரீஜித், உச்சநீதிமன்ற   வழக்கறிஞர் பிரபாகரன், ப்ரியா மேனன் ஊடகவியலாளர், சனாதியா என்ற கேரளா சமூக ஆர்வலர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவர்களை சரண் ஜெயராமன் என்பவர் Moderate செய்யவுள்ளதாக ஷாஷா கூறியுள்ளார். 

அத்துடன் இந்த நிகழ்வில், கலை நிகழ்ச்சிகள், நடனம்,உணர்ச்சிப்பூ ர்வமான  இரண்டு மேடை நாடகம் மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்கின்ற வகையில் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் முக்கியமாக ரெயின்போ அம்பாசிட்டர் விருது வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது LGPT சமூகத்தை சாரத மக்கள்  LGPT சமூகத்திற்கு பொதுவெளியில் உதவி செய்பவர்கள், திரைப்படங்கள் இயக்குபவர்கள், எழுத்தாளர்கள், அவர்களை பற்றிய சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் நல்லவிதமாக செய்திகள் மற்றும் வீடியோக்களை வெளியிடுபவர்கள் போன்றவர்களுக்கு குறித்த விருது வழங்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அந்தவகையில், இந்த வருடம், கிருத்திகா உதயநிதி, ஆசிபா பாத்திமா ஊடகவியலாளர், இயக்குனர் நந்தினி (இன்ஸ்பெக்ட்டர் ரிஷி),நடிகை ஷகீலா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஷாஷா தெரிவித்துள்ளார். 

மேலும், கிருத்திகா உதயநிதி அவர்கள் துணை முதலமைச்சரின் மனைவியாக இருந்தாலும் முற்போக்கு சிந்தனையுடன் படமாக்கியுள்ளார். அதாவது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில்   இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் விடயத்தை படமாக்கியுள்ளதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
https://x.com/NewsTamilTV24x7/status/1887535478422884510


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krithika Udhayanidhi receives Rainbow Ambassador Award


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->