காரைக்கால் மீனவர்கள் விடுதலை.. குடும்பத்தினர் துணை நிலை ஆளுநரிடம் மனு!  - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் குடும்பத்தினர் - பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம்  தலைமையில் துணை நிலை ஆளுநரிடம் மனு அளித்தனர். 

கடந்த 08.01.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென புதுவை மாநில அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,  துணைநிலை ஆளுநரின் முயற்சியால் மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டன.

அதனடிப்படையில் 9 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். காரைக்கால் மீவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விடுதலை செய்யப்படாமல் மிஞ்சியுள்ள ஒரு மீனவரான காரைக்கால் கீழகாசாக்குடி மேடு பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரை விடுதலை செய்ய வேண்டியும்  காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம்  தலைமையில் புதுவை மாநில அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karaikal fishermen released Family petitions Lieutenant Governor


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->