உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி..கேரளாவை சேர்த்தவர் கைது!   - Seithipunal
Seithipunal


 

உடனடி கடன் செயலி மூலம் பணம் பெற்றவர்களை  ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பரப்பி விடுவேன் என  மிரட்டி 465 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் கேரளா மலப்புரம் மாவட்டச் சேர்ந்த முகமது ஷரீப் 42 வயது என்பவர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
 
இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான பொதுமக்களை உடனடி கடன் செயலி (instant loan app) மூலம் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் உடனடியாக 2000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுத்து அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும் அவர்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என  மிரட்டி 465 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் கேரளா மலப்புரம் மாவட்டச் சேர்ந்த முகமது ஷரீப் 42 வயது என்பவர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இணைய வழி மோசடி கும்பலுக்கும் இந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை அடித்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மிக எளிதாக வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைன் கேமில் பணம் ஜெயிப்பவர்களுக்கு இணைய வழி மோசடியில் வந்த பணத்தை  அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்து மக்களை மிரட்டி சம்பாதித்த பணம்  465 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால் மத்திய அமலாக்க enforcement directory துறையும் இது சம்பந்தமான தகவல்களை புதுச்சேரி காவல்துறையிடம் இருந்து கேட்டு பெற்று அவர்களும் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து 331 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபரிடம் பெற்ற வாக்குமூலத்தின் படி இன்னும் பல்வேறு நபர்கள் இதில் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது ஆகவே இது சம்பந்தமான விசாரணையை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்க புதுச்சேரி காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதால் அதைப்பற்றி விசாரிக்க புதுச்சேரி இணைய வழி போலீசார் கேரளா சென்றுள்ளனர். SSP அறிவுறுத்தலின்படி அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் வெளிநாட்டுக்கு சென்றவர்களின் விவரங்கள் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டுக்கு எவ்வளவுநபர்கள் சென்றுள்ளனர் வெளிநாட்டில் எத்தனை கிளைகள் அந்த நிறுவனத்துக்கு உள்ளது போன்ற பல்வேறு தகவல் திரட்ட தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 465 crore fraudulent through instant loan app Kerala man arrested!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->