டாடா பட நடிகையை கரம் பிடித்த மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அபர்ணா தாஸ், மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் டாடா படத்தில் கவின் ஜோடியாக நடித்திருந்தார். இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீபக் பரம்போல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor abarna dass married actor deepak parambol


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->