பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா.!.
ACTOR ARJUN AFFECTED CORONA
பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவ்வப்போது திரை நட்சத்திரங்களும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் போது, அந்த திரைப்பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று குறித்து, தங்கள் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் உறுதியாகியுள்ளது.
இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அவருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தினால், அவர் செய்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
English Summary
ACTOR ARJUN AFFECTED CORONA