ரஜினியை வைத்து படம் இயக்க வாய்ப்பு; 'எம்புரான்' டீசர் வெளியீட்டு விழாவில் பிருத்விராஜ் பேச்சு..! - Seithipunal
Seithipunal


நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மம்மூட்டி & மகிழ் திருமேனி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். 

இதன் போது  பிருத்விராஜ் பேசும் போது சில சிஷன்களை பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக, " தயாரிப்பு நிறுவனமான லைக்கா என்னை  ரஜினிகாந்த் வைத்து  இயக்க வாய்ப்பு கொடுத்தது.

என்னை மாதிரி புதிய இயக்குனர்களுக்கு  அந்த வாய்ப்பு கிடைப்பது அற்புதமான ஒன்று. அது கிடைக்க, நானும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன் ரஜினிகாந்த் சாருக்கு கதை பண்ண. ஆனால் லைக்கா கொடுத்த காலளவில் என்னால் கதையை உருவாக்க முடியவில்லை. இதனால் அது நடக்காமல் போய்விட்டது " என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prithviraj talks about getting the opportunity to direct a film with Rajini


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->