அக்கா மகனை ஹீரோவாக்கும் நடிகர் தனுஷ்.! - Seithipunal
Seithipunal


அக்கா மகனை ஹீரோவாக்கும் நடிகர் தனுஷ்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன், மாறன் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என்று பல அவதாரங்களில் வலம் வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் நடிகர் தனுஷ் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தயாரிப்பாளர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகர் தனுஷ் தனது அக்கா மகனை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dhanush intro sister son on film industry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->