முடிந்தது பிரச்னை! நடிகர் சங்கத்திற்கு நடிகர் தனுஷ் நன்றி!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலையில் தனுஷ் இரண்டு தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் தராதது குறித்த ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் தனுஷை வைத்து தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

பின்னர், கடந்த 9ஆம் தேதி வாங்கிய முன் பணத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கால்ஷீட் தருவதாகவும், மற்றும் ஒரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை தருவதாகவும் நடிகர் தனுஷ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. தனுஷின் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தர அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "எனது தயாரிப்பாளர்கள், தேனாண்டாள் பிலிம்ஸ் (திரு. முரளி அவர்கள்) மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (திரு கதிரேசன் அவர்கள்) எழுப்பிய புகார்களை, தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFSI) ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.

உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள். தங்கள் உதவி பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக திரு. நாசர் அவர்கள், திரு.கார்த்தி, திரு.விஷால், திரு.கருணாஸ் மற்றும் திரு.பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு ஒரு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Dhanush thanks to Actor Committee


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->