#BREAKING : அவன்-இவன் பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி .. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Actor GM Kumar admitted hospital
பிரபலல நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபு, பல்லவி நடிப்பில் வெளியான ‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக ஜஅறிமுகமானார் ஜி.எம்.குமார். அதனைத் தொடர்ந்து, பிக் பாக்கெட், இரும்புப்பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.எம்.குமார், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ஜி.வி.குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Actor GM Kumar admitted hospital