தன்னை சிலர் பகடை காயாக பயன்படுத்த முயற்சித்தார்கள்..திருமாவளவன் ஆவேசம்!
Some people dried to use him as a bounce Thirumavalavan is Furious
அரசியலில் தன்னை சிலர் பகடை காயாக பயன்படுத்த முயற்சித்தார்கள் என்றும் என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை என திருமாவளவன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் . அப்போது அவர் கூறியதாவது;-
"பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் அரசியலில் என்னை சிலர் பகடை காயாக பயன்படுத்த முயற்சித்தார்கள் என கூறிய திருமாவளவன்என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை என ஆவேசமாக பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய திருமாவளவன் தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் நாம் கோரிக்கை வைக்கக் கூடியவர்களாக மட்டும் இருக்க கூடாது என்றும் கோட்பாடுகளை பாதுகாக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என ஆவேசமாக திருமாவளவன் கூறினார்."இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
English Summary
Some people dried to use him as a bounce Thirumavalavan is Furious