மும்பை தாக்குதல் பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அனுமதி!
US allows extradition of Mumbai attack terrorist to India
அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்ததையடுத்து ,மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மராட்டிய மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். அதன்பின்னர் அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது வந்தது.
இதையடுத்து தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இந்தநிலையில் இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
US allows extradition of Mumbai attack terrorist to India