சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 5 பேர் கைது..போலீசார் அதிரடி!
Five Bangladeshi nationals arrested for illegally immigrants Police in action
மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
மேலும் அப்படி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நகர போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையானது பயங்கரமாக இருந்தது.அப்போதுதான் இவர்கள் சிக்கியுள்ளனர்.
அப்போது மாவட்டத்தின் கல்யாண் மற்றும் டோம்பிவிலி பகுதிகளில் சிறு வேலைகள் செய்து வந்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கும் இங்கு தங்குவதற்கும் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Five Bangladeshi nationals arrested for illegally immigrants Police in action