என்னது ஹன்சிகாவுக்கு கல்யாணமா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா. இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.  அதன் பிறகு தமிழில் தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். இதில், சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனால்.  பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. 

இதையடுத்து தற்போது, ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி', உள்ளிட்ட சில படங்களிலும் ஹன்சிகா நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் எமோஷனல், ஹாரரை அடிப்படையாகக் கொண்டு  காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக இதன் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருமணத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும்  சொல்லப்படுகிறது. 

எனவே ஹன்சிகாவின் திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பையும், திருமணம் குறித்த தேதியையும் விரைவில் ஹன்சிகா வெளியிடுவார் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor hansika marriage update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->