#BREAKNG : நடிகர் கமல்ஹாசன் உடல் நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!
actor Kamal Hassan medical report released Sri Ramachandra hospital
நடிகர் கமல்ஹாசன் உடல் நலம் குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
![](https://img.seithipunal.com/media/FB_IMG_1669285512251-872re.jpg)
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதில், மருத்துவர்கள் நடிகர் கமல்ஹாசனை 2 நாட்கள் ஓய்வு எடுக்க சொன்னதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடல் நலம் குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உடல்நலம் தேறி வருகிறார் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
actor Kamal Hassan medical report released Sri Ramachandra hospital