டெல்லி தேர்தல் முடிவு! அண்ணாமலை சொன்ன முக்கிய செய்தி!
BJP Annamalai delhi election result
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் வெற்றிக்குச் செல்லும் முன்னிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். 48 இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து, மாநில தலைவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், "ஊழல் மற்றும் வெறும் வாக்குறுதிகளில் மூழ்கிய ஆம் ஆத்மியை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளனர். காங்கிரசை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒழித்து, பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்த முடிவுகள், பிரதமர் மோடியின் வளர்ச்சி மயமான அரசியலை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தூண்டிவிடும் பிளவை விட, வளர்ச்சி மற்றும் நாட்டின் முன்னேற்றம் என்பதே மக்களின் முன்னுரிமையாக உள்ளது.
இந்த அபார வெற்றிக்காக பாஜக தலைவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
BJP Annamalai delhi election result