டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! 17 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!
erode east by poll result NTK Deposit loss DMK Win
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது. மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், 17 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்துள்ளது.
இருப்பினும் பழுதான 3 வாக்கு இயந்திரங்களின் வாக்குகள் மட்டும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 114439 வாக்குகள் (சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியத்தில் வெற்றி) பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23810 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளார்.
இந்த தேத்தலில் நோட்டாவுக்கு 6040 வாக்குகள் கிடைத்துள்ளன.
English Summary
erode east by poll result NTK Deposit loss DMK Win