மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் - அரவிந்த் கேஜ்ரிவால்! - Seithipunal
Seithipunal


டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது. 70 தொகுதிகளுக்காக மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

களத்தில் முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது.  

தேர்தல் நாள் பலத்த பாதுகாப்பில் நடைபெற்ற நிலையில், 60% வாக்குகள் பதிவாகின. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே பாஜக முன்னணியில் இருக்கும் நிலை தெளிவாகியது.

தற்போதைய நிலவரப்படி, பாஜக 48 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  

புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தமது முக்கியமான கட்டத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியைச் சந்தித்தார்.  

இதனை தொடர்ந்து, "மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். எதிர்க்கட்சி பங்கில் அமர்ந்து மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன்" என்று கேஜ்ரிவால் கூறினார்.  

மேலும், "டெல்லி மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிர்வாகம் நிறைவேற்றும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Delhi Election Results 2025 Aam Aadmi aravind kejriwal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->