பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மாஸ் விருந்து கொடுத்த நடிகர் கமல்.!
actor kamal party to bigg boss contestants
தமிழில் பிக் பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விஜே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். மேலும், மணி சந்திரா இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசனில் வைல்ட் கார்டில் போட்டியாளராக நுழைந்து பட்டம் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகையும்,15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட் மற்றும் கார் ஒன்றும் கொடுக்கப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/bigg boss party 1-p5k9w.png)
இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் நடிகர் கமல்ஹாசன் மேடையிலேயே தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தான அப்டேட்டைகொடுத்தார். அதன் பிறகு போட்டியாளர்களுக்கும் விஜய் டிவியில் முக்கியமானவர்களுக்கும் மாஸான விருந்து கொடுத்துள்ளார்.
அதாவது தம் பிரியாணி, சிக்கன் குருமா என்று அசைவத்திலும் மறுபுறம் சாதம், முருங்கைக்காய் சாம்பார் என்று சைவத்திலும் மெனு கொடுத்து அசத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
actor kamal party to bigg boss contestants