இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்காசன் வாங்கிய சம்பளம் - எவ்வளவுத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இந்தத் திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இன்றைய அரசியல்  கட்டமைப்பில் இந்தியன் தாத்தா திரும்ப வந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை அடிப்படையாக கொண்டு இந்தியன் 2 படம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக நடிகர் கமல்ஹாசன் எத்தனை கோடி பெற்றார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் 150 கோடி சம்பளம் பெற்றார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhaasan take 150 crores salary for act indian 2 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->