சூடு பிடிக்கும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்.. பாஜகவில் இணையும் பிரபல கன்னட நடிகர்.! - Seithipunal
Seithipunal


வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் முடிவடைகின்றது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆகவே, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 எம்எல்ஏக்கள் அவசியம். இந்த நிலையில் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை வெளியிட்டது.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பாஜகவில் இணையும் நடிகர் கிச்சா சுதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor kicha sudeep possible to join BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->