நான் பார்த்த அனைத்தும் திடீரென்று போய்விட்டது - மகேஷ் பாபுவின் உருக்கமான பதிவு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவர் தொடர்ந்து தனது குடும்பத்தினரை இழந்து வந்ததால் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இந்தாண்டு ஆரம்பத்தில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். 

அதன் பின்னர், மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது மூப்பின் காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி அவரின் தந்தையும் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணா உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதன் காரணமாக மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது தந்தை மறைவையொட்டி வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, "நீங்கள் வாழும்போது உங்களைக் கொண்டாடினார்கள். நீங்கள் மறைந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். 

இதுதான் உங்களுடைய மகத்துவம். தைரியமும் துணிச்சலும் உங்களுடைய இயல்பிலேயே உள்ளது. இதுவரை நான் பார்த்த அனைத்தும் திடீரென்று போய்விட்டது. இதுவரைக்கும் என்னுள் இல்லாத ஒரு வலிமையை இப்போது நான் உணர்கிறேன். மேலும் பயமில்லாமல் இருக்கிறேன்.

உங்களுடைய வெளிச்சம் எப்போதும் என்மீது பிரகாசிக்கும். அதனால், எனக்கு எந்தப் பயமும் இல்லை. உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். லவ் யூ நான்னா...மை சூப்பர் ஸ்டார்" என்று ஒரு கவலையுடனும், ஒரு தைரியத்துடனும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor magesh babu twitter post


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->