நடிகரும், இயக்குனருமான மனோபாலா காலமானார்! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனர் மனோபாலா இன்று உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

கல்லீரல் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு அவரின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, நகைச்சுவை நடிகராகவும் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் ஜொலித்து வந்தார்.

ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் மனோபாலா. 1970 ஆம் ஆண்டு முதலில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, பாரதிராஜாவின் புதிய வழக்கை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி உள்ள மனோபாலா தெலுங்கு, தமிழ், மலையாள படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்தும் புகழ்பெற்றுள்ளார்.

மேலும் அவர் இயக்கிய தமிழ் திரைப்படங்களில் ஆகாய கங்கை அவரின் முதல் படம், நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, செண்பகத் தோட்டம், நந்தினி, அன்னை கடைசியாக 2002 ஆம் ஆண்டு நைனா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் ஹிந்தி, கன்னடம் படங்களையும் அவர் இயக்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல் பஞ்சவர்ணம், புன்னகை, 777 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Manobala Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->