நடிகர் பிரபுதேவா - மடோனா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!
Actor Prabhu Deva Madonna movie Update
நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை மடோனா நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
லியோ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்ற மடோனா செபாஸ்டியன் தற்போது பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த திரைப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது.
![](https://img.seithipunal.com/media/JJ-9efhy.jpg)
இந்த திரைப்படத்திற்கு விநாயகர் மூர்த்தி இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகி பாபு, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஜாலியோ ஜிம்கானா' என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
English Summary
Actor Prabhu Deva Madonna movie Update