ஆராய்ச்சியாளர்களுக்கே அதிர்ச்சி; நீருக்குள் மூழ்கிய நிலையில் உள்ள முருகன் கோவில்; இத்தனை ஆண்டுகள் எப்படி சாத்தியம்? - Seithipunal
Seithipunal


குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்று சொல்லுவார்கள். பொதுவாகவேர் முருகன் கோவில்கள் மலை மீது தான் அதிகம் இருக்கும். ஆனால், கிராமங்கள் , நகர்ப்புறங்களில் அதிகளாவ புதிதாக கட்டிய கோவில்கள் மலை மீதி இல்லாமல் தர தளத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 

அதிலும் அறுபடை வீடுகளில் மிக முக்கிய தலமான திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டும் கடலோரத்தில் அமைந்துள்ளது. ஆனால், இதுவும் மலை கோவில் தான் என்று சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சந்தன மலை என்ற மலை மீதே இந்த கோவில் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. 

இதற்கு சான்றாக கோவிலுக்குள் இருக்கும் பெருமாள் சன்னதி, வள்ளிகுகை ஆகியவற்றின் மீது கல் பாறைகள் இன்றும் இருப்பதை காண முடியும். இது இப்படி இருக்க, எங்குமே காண முடியாத அதிசயமாக வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி இருக்கும் முருகன் கோவில் ஒன்று நம்முடைய தமிழ்நாட்டில் அமைந்துள்ளது அது எங்கே என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுக் நடுவே அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் தான் அதிசய திருகோவில். இந்த கோவில் நீரில் மூழ்கி இருப்பது மட்டும்மல்ல இக்கோவிலை பற்றிய பல தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

அதாவது திருச்செந்தூர் மூலவர் திருமேனியே இங்குள்ள கல்லால் தான் செதுக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதனால் திருச்செந்தூர் முருகனுக்கு  இணையான இந்த கோவிலை கருதி, திருச்செந்தூர் கோவிலுக்கு வேண்டிக் கொண்ட பலர் இங்கு வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பல வெள்ளப் பெருக்கை கண்ட இக்கோவில் இதுவரை எந்த சேதமும் ஏற்படாமல் கம்பீரமாக ஆற்றுக் நடுவே காட்சி தருகிறது. இங்குள்ள மூலவரும் திருச்செந்தூர் மூலவரை போலவே கையில் பூ, ஜப மாலையுடன் காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, திருச்செந்தூர் மூலவர் விக்ரஹரகம் அந்நியர் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டதோடு, டச்சுக்காரர்களால் கடத்திச் சென்று கடலில் போடப்பட்ட திருச்செந்தூர் சண்முகர் சிலையை மீட்ட வடமலைப்பிள்ளை, திருச்செந்தூர் மூலவர் விக்ரஹத்தை புதுப்பிக்க முயற்சிகள் செய்திருக்கிறார்.

அப்போது அவருக்கு முருகப் பெருமானின் சிலையை வடிக்க எந்த சரியான கற்கள் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் கற்கள் தெய்வீக தன்மை கொண்டதாக இருப்பதை வடமலைபிள்ளை அறிந்தார். பின்னர் அவருடைய தாயாருக்கு  அருள் வந்து, அவர் ஒரு பாறையில் திருச்செந்தூர் ஆண்டரின் திருமேனியை படமாக வரைய, அதை அப்படியே சிற்பமாக வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது. 

திருச்செந்தூர் முருகன் சிலை மட்டுமின்றி ஏராளமான சுவாமி சிலைகள் இங்குள்ள கற்கரைக் கொண்டே செய்யப்பட்டதால் இந்த இடத்திற்கு திருவுருமாமலை என்ற பெயர் ஏற்பட்டது.

திருச்செந்தூர் முருகன் சிலையை செய்த சிற்பி, ஒருநாள், வள்ளி-தெய்வானையுடன் இருக்கும் முருகன் சிலையை செய்ய ஆசைப்பட்டு, அதே போல் ஒரு சிலையை ஆற்றிற்கு நடுவே வடித்துள்ளார்.  நாளடைவில் ஆற்றுக்கு வரும் மக்கள் இதை வழிபட தொடங்கியதோடு, திருப்பணி செய்து கோவிலும் எழுப்பியுள்ளனர். 

ஆற்று வெள்ளத்தை கிழித்து சிதறச் செய்யும் வகையில் இக்கோவிலின் மேற்பகுதி படகின் அடி பாகத்தை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை கீழக் கோவில் என்றும், இதே போல் ஒரு கி.மீ., தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகன் கோவிலை மேலக் கோவில் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். 

ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில் இங்குள்ள உற்சவர் சிலை, மேலக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நித்யபூஜைகள் நடத்தப்படுகிறது.

திருச்செந்தூரை போன்றே இந்த கோவிலிலும் பஞ்சலிங்கங்களை தரிசிக்க முடியும். சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாவின் போது முருகப் பெருமானுக்கு சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி, வெள்ளை சாத்தி உற்சவங்கள்  திருசிந்தூரில் நடப்பது போலவே இங்கும் நடத்தப்படுகிறது.  

மழைக்காலங்களில், தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் காலங்களிலும் இந்த கோவில் நீருக்குள் மூழ்கிய நிலையிலேயே இருக்கும். இந்த கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. ஆகையால், நெல்லையப்பர் கோவில் திருவிழாவின் போது இக்கோவில் முருகப் பெருமான் நெல்லையப்பன் கோவிலுக்கு எழுந்தருள்வார்.

திருச்செந்தூர் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த குறுக்குத்துறை முருகன் கோவில் செவ்வாய் தோஷம் போக்கும் கோவிலாக உள்ளது. திருச்செந்தூர் திருத்தலத்திற்கு இணையான கோவிலாக கருதப்படும் இக்கோவில் பலவிதமான சிறப்புக்களை பெற்ற கோவிலாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Submerged Murugan temple in Tirunelveli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->