வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தின் தோற்றம்.!! - Seithipunal
Seithipunal


வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தின் தோற்றம்.!!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'புராஜெக்ட் கே’. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். 

பல மொழிகளில் உருவாகிவரும் இந்தத் திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

'புராஜெக்ட் கே' திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவும், அறிவியல் புனைவு கதை ஜானரை மறு வரையறை செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புராஜெக்ட் கே படத்தில் நடிகர் பிரபாஸின் தோற்றம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பும் காட்சியும் நாளை சான் டியாகோ காமிக்-கான் 2023 இல் வெளியிடப்படும். 

மேலும், இந்தப் படத்தின் முக்கிய காட்சியை வெளியிடவும், ‘புராஜெக்ட் கே’ என்றால் என்ன? என்பதை வெளிப்படுத்தவும் படக்குழு காத்திருக்கிறது. இந்த நிகழ்வுக்காக நடிகர்கள் கமல்ஹாசன், பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor praboss first look from project k movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->