150 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.. குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

மேலும், இவர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விஜய் டிவி புகழ் பாலா பல ஏழை குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு சுமார் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தார். 

மேலும், ருத்ரன் இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்குக் கல்வியை வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Raghava Lawrence adopted 150 children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->