தனுஷுடன் இணையும் வாரிசு பட நடிகை.! - Seithipunal
Seithipunal


வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷுடன் முதல் முறையாக ராஷ்மிகா இணைந்து நடிக்க உள்ளார். அதாவது, சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றம் வருகிற 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமடைந்த ராஷ்மிகா தற்போது, குபேரா படத்தில் தனுஷுடன் இணைய இருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rashnika mandana joined work with actor dhanush


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->