மகாராஜா பட இயக்குனரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்தப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மகாராஜா பட இயக்குனரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே 23 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan meet maharaja movie director


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->