அடடே.. காத்துவாக்குல 2 காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவரா.?! நல்லவேளை தப்பிச்சிட்டாரு.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து டைட்டில் கார்டு போடுகின்றனர். 

சமீபத்தில் இவர் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகியது.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க அரிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!! - Seithipunal

இதன் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. 

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் தான் இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan missed kvk movie 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->