அடுத்ததாக மாநாடு பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.?! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் குடும்பப்படங்களில் நடித்து பெருமளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். இதனால் தன் சொந்த அண்ணன் போல் ரசிகர்கள் பலரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கே.வி அனூதீப் இயக்கத்தில் 'எஸ்.கே.20' என்ற ஒரு படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாடல் காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மரியா ரியாபோஸப்கோ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கும் 'எஸ்.கே.21' என்ற புதிய படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். 

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan next movie with vp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->