புயல் பாதிப்பு - 10 லட்சம் நிவாரணம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் "மிக்ஜாம் புயல்" பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சிவகார்த்திகேயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் - இயக்கங்கள் - தனிநபர்கள் என்று பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் - சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan provide ten lakhs compensation for michaung cyclone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->