வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா இல்லையா? ....மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!....வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தின்  வெற்றியை தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் .இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விரைவில் வெற்றிமாறனின் விடுதலை 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் குறித்து, வெற்றிமாறனின் ரசிகர்கள்  மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் நிலையில், நடிகர் சூர்யா நடிக்கிறார்.  இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இதற்கிடையேயே சமீபத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாக பல செய்திகள் வெளியானது.

மேலும் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் பல விதமான வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள்  குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி மாறன், நிறைய நாட்களாக சொல்லிக்கிட்டே இருக்கோம் படம் வரும் வரும்னு.. கூடிய விரைவில் படத்தை துவங்கிவிடுவோம் என்று கூறினார்.

மேலும் வாடிவாசல் படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, உலகத் தமிழர்களுக்கு வாடிவாசல் திரைப்படம் அங்கீகாரமாக அமையும் என்றும், வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா தான் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Suriya not in Vadivasal movie Vethimaran who gave mass update End of rumours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->