டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துகிறது..அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!  - Seithipunal
Seithipunal


டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தலைநகர் டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றனர்.மேலும்  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. அங்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது,டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்றும்  டெல்லி போலீசார் அனைவரும் பாஜகவுடன் இருக்கின்றனர் என்றும் மக்களின் பாதுகாப்பிற்கு யாரும் இல்லை என்றும்  ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்திற்கு இடையூறு செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து நேரடியாக உத்தரவு வந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி என்னிடம் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார் . மேலும் பேசிய  கெஜ்ரிவால் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்களோ? என்ற அச்சமும் எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும்  பாஜக பிரசாரத்திற்கு தேவையான வசதிகளை போலீசாரே செய்துகொடுக்கின்றனர் என்றும் குற்றசாட்டியுள்ள   கெஜ்ரிவால் ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பாஜக தொண்டர்களுக்கு போலீசார் ஆதரவு அளித்து வருகின்றனர்' என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP is misusing Delhi Police Arvind Kejriwals allegation 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->