இன்று ஒரு நாள் தடை - ஊட்டி மலை ரயில் சேவை அறிவிப்பு! சுற்றுலாப் பயணிகள் சோகம்!
One day suspension today Ooty Hill Train service announced Tourists sad
சுற்றுலா பயணிகளுக்காகவும் மக்களுக்காகவும் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது.
மேலும் இந்த ரெயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் , கனமழை காரணமாக மலை ரெயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தால் தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
English Summary
One day suspension today Ooty Hill Train service announced Tourists sad