இனி வாரத்தில் அனைத்து நாட்களும் சத்துணவுடன் கூடிய முட்டை.. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும் என பட்ஜெட்டீல்  முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த பத்தாம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.அதன்  பின்பு இன்று காலை சட்டப்பேரவை 2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது 2025 மற்றும் 2026ஆம் நிதி ஆண்டிற்கான ஏராளமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

 அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பதை பார்க்கலாம்:

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்

கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும்

 மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்..

முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்படும்

வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் 3- லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டமிபட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும்.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல்  இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.

6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் விகிதம் 3 ஆண்டுகள் மாதம் தோறும் ஊக்குவிப்பு தொகையாக அரசு வழங்கும். 

அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.2000 வழங்கப்படும் .

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல்  இலவச அரியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என முக்கிய அறிவிப்புகளை  முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eggs with nutritious food all days of the week Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->