மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் சூர்யா.? ஆத்திரத்தின் உச்சியில் ஏற்ப்பட்ட சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின.

அவரது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் ரிலீசானது. ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே தனது தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சூர்யா ஆலோசனை செய்து வந்தார். 

தற்போது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சூர்யாவுக்கு வெற்றி படங்களை கொடுத்த பெருமை பாலாவிற்கு தான் சேரும். இந்த படத்தை நடிகர் சூர்யா தான் தயாரிக்கிறார். 

சூர்யாவின் மற்ற படங்களைப் போல வணங்கான் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக தியேட்டர் உரிமையாளர்கள் கோபத்தில் இருந்த நிலையில் மீண்டும் சூர்யா அதே முடிவை எடுப்பதாக கூறப்படும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor suryas vanangan Movie may Release on ott


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->