சோகத்தில் திரையுலகம் - பதேர் பாஞ்சாலி படத்தின் நடிகை உமா தாஸ்குப்தா காலமானார்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சத்யஜித் ரேயின் இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை உமா தாஸ்குப்தா. சிறுவயதிலிருந்தே மேடையில் நடிப்பதை வழக்கமாக கொண்ட இவர் பள்ளியில் படிக்கும் போது நாடகத்தில் நடித்ததைக் கண்ட சத்யஜித் ரே, 'பதேர் பாஞ்சாலி'யில் துர்கா கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்தார். 

பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம் கடந்த 1955-ம் ஆண்டு வெளியானதால், அவருக்கு பேரும் புகழ் கிடைத்தது. இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். 

இதையடுத்து அவர் தனது சொந்த காரணங்களுக்காக வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், திரைத்துறையை விட்டு விலகினார். இதைத் தொடர்ந்து தாஸ்குப்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். 

84 வயதான இவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே படத்தின் மூலம் பிரபலமான உமா தாஸ்குப்தாவின் மறைவு, திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor uma dasgupta passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->