மணிப்பூர் பதற்றம் - குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம்.!
mallikarjune karke write letter to droubati murmu for manipur issue
மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் வன்முறை நடந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துள்ளன. மக்களின் துயரம் தொடர்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும், நமது அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருந்து, அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தவும், மணிப்பூர் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உங்கள் தலையீட்டின் மூலம், மணிப்பூர் மக்கள் மீண்டும் கண்ணியத்துடன் மற்றும் பாதுகாப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன்." என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
mallikarjune karke write letter to droubati murmu for manipur issue