கோவை கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் மரணத்தில் திடீர் திருப்பம்! காவல்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கோவைச் சேர்ந்த 15 வயது கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் மரணத்தில் சிக்கன் ரைஸ் காரணமாக இல்லை என்று விசாரணை முடிவில் போலீசார் உறுதிப்படுத்தினர்.  

விளையாட்டின்போது ஏற்பட்ட காயம் காரணமாக வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதி சதை கிழிந்து, நுரையீரல் செயலிழந்ததை முக்கிய காரணமாக போலீசார் குறிப்பிட்டனர்.  

மரணத்திற்கு முன்பு சென்னைக்கு திரும்பும் ரயிலில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டிருந்தார். ஆனால், அதனால் எந்தத் தீவிரமான விஷப்பரவல் ஏற்பட்டதாக இல்லை.  

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, உணவு நச்சு தொடர்பான பாதிப்பு என கருதப்படவில்லை.  

மருத்துவமனையில் சிகிச்சை முடித்து உறவினர் வீட்டில் இருந்தபோது, மயங்கி விழுந்து உடனடியாக உயிரிழந்தார்.  

இந்த வழக்கின் பரிசோதனையில் உணவுக் காரணமாக மரணம் நிகழ்ந்தது என உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் உடல் உபாதை முக்கிய காரணமாக விளக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Sports woman death case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->