அறுபது லட்சத்தை நெருங்கிய தளபதியின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்.! - Seithipunal
Seithipunal


அறுபது லட்சத்தை நெருங்கிய தளபதியின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் சாதாரணமாக எந்த ஒரு செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் வரவேற்பை பெறும்.

அந்த வகையில், நடிகர் விஜய், தற்போது பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பாலோவர்ஸ் குவிந்தனர். 

அதுமட்டுமல்லாமல், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிதாக நடிக்கவுள்ள லியோ பட கெட்டப்பில் ஒரு மாஸ் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்டுள்ளது. இதற்கு மேலும் பாலோவர்ஸ் எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், விஜய்யின் ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay reached sixty lakhs followers in instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->