தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் - கதறி அழுவும் தொண்டர்கள், ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு, அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை ஆறு மணிக்கு விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்த பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முதல் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

தீவுத்திடலுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் மதியம் ஒரு மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijayakanth body in theevu thidal for fans tribute


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->